NFPE VRIDDHACHALAM DIVISION

Sunday, November 29, 2015

டிசம்பர் 1 & 2 வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு .


டிசம்பர் 1 & 2 வேலை நிறுத்தம்தள்ளிவைப்பு .
அன்புள்ள தோழர்களே !
26.11.2015 அன்று டெல்லி யில் கூடியநமது சம்மேளன செகட்ரியேட் கூட்டம்ஏழாவதுசம்பள கமிஷன் தனது அறிக்கையை அரசிடம்கொடுத்துவிட்ட சூழல்,  மற்றும் GDS ஊழியர்யளுக்கென  ஓய்வு  பெற்ற அதிகாரியின்தலைமையில் ஒரு கமிட்டி  அமைக்கப்பட்டபின்பு  உள்ள சூழலை ஆய்வு செய்தது
மேலும் இந்த புதிய சூழலில் GDS ஊழியர்களின்  சம்பள ஆய்வினை ஏழாவதுஊதிய குழுவிற்கு உட்படுத்த வேண்டும் என்பதுஉட்பட ,அவர்களின் நியாயமானகோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக NFPE மற்றும் AIPEU GDS (NFPE ) டிசம்பர் 1 & 2தேதிகளில் விடுத்துள்ள  வேலை நிறுத்தஅறைகூவல் குறித்தும் பரிசீலனை செய்தது .
அரசு மற்றும் அஞ்சல் வாரியத்திடம்கொடுக்கப்பட்ட கோரிக்கை சாசனத்தின் மிகமுக்கியமான கோரிக்கை, GDS  ஊழியர்களின் சம்பள ஆய்வினை ஏழாவது ஊதிய குழுவிற்குஉட்படுத்த வேண்டும் என்பது தான் . இந்த கோரிக்கையை  வென்றெடுப்பதற்காக  தர்ணா,உண்ணாவிரதம் , GDS ஊழியர்களின்பாராளுமன்ற பேரணிNFPE  & FNPO இணைந்தJCA சார்பாக பாராளுமன்ற பேரணி12.12.2012ஒரு நாள் வேலை நிறுத்தம்12.02.2014 & 13.02.2014 இரண்டு நாள் வேலை நிறுத்தம் எனபல்வேறு இயக்கங்களை NFPE  நடத்தியுள்ளது. நமது இத்தகைய போராட்டஇயக்கங்களினால்தான் GDS  ஊழியர்களைஏழாவது சம்பள கமிஷன் பரிசீலனைக்குள்கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையை தபால் வாரியம் தனது சாதகமான சிபாரிசுடன்நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது ஆனால்நிதி அமைச்சகம்  மூன்று முறை நிராகரித்தபின்னணியில்தான் GDS  ஊழியர்களை ஏழாவதுசம்பள கமிஷன் பரிசீலனைக்குள் கொண்டு வரஅரசை வலியுறுத்தி  NFPE & AIPEU  GDS  (NFPE )  டிசம்பர்  1& 2 , 2015  இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்  செய்திட அறைகூவல்விடுத்தது .
GDS  ஊழியர்களை  ஏழாவது சம்பளகமிஷனில் சேர்ப்பதற்கு அரசுமறுத்துவிட்டபோதும்,  GDS  ஊழியர்களைஅரசு ஊழியர்களாக்கி  அவர்களுக்குவிகிதாச்சார அடிபடையில் இலாகாஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துபயன்களும் வழங்கப்படவேண்டும் என்ற அவர்களது  முக்கியமான கோரிக்கையைஏழாவது சம்பள கமிஷன் பரிசீலித்தது.  ஆனால்ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிதலைமையிலான சம்பள கமிஷன்  நமதுகோரிக்கையை பரிசீலித்து GDS  ஊழியர்கள்அரசு பதவியை வகித்தாலும் அவர்கள் அரசுஊழியர்கள் அல்ல என்று திட்டவட்டமாகஅறிவித்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  ஏழாவது சம்பள கமிஷனின்  இத்தகையகருத்துரைக்குப்பிறகு, GDS  ஊழியர்கள்ஏழாவது சம்பள கமிசனில்  சேர்க்கப்பட்டாலும் அவர்களது கோரிக்கையில்   நல்ல தீர்வு கிடைத்திடாது .  எனவே அரசின் முன்பு நாம்வைக்கும் கோரிக்கையினை மாற்றிட வேண்டியநிர்ப் பந்தத்தை இது நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
NFPE  ஆரம்பம் முதலே அதிகாரி கமிட்டிநியமனத்தை எதிர்த்து வந்தது . NFPE  & AIPEU GDS  (NFPE) , அதிகாரி கமிட்டி நியமனத்தைதவிர்ப்பதற்கும் , GDS  ஊழியர்களை ஏழாவதுஊதிய குழுவில் சேர்ப்பதற்கும்  நமதுஇலாகாவை வலியுறுத்தி வந்தது.  ஆனால் NDA அரசு நமது கோரிக்கையை  நிராகரித்து  ஓய்வு பெற்ற அதிகாரி தலைமயில் ஒரு கமிட்டியைதன்னிச்சையாக நியமித்து மூன்று லட்சம் GDS ஊழியர்களை ஏமாற்றிவிட்டது . ஓய்வு  பெற்றஅதிகாரிகள் கமிட்டி  GDS  ஊழியர்களுக்குஒருபோதும் நீதி வழங்கியது கிடையாது என்பது நமது கடந்த கால அனுபவமாகும்.
அரசு ஊழியர் அந்தஸ்து என்ற நமதுகோரிக்கையை ஏழாவது சம்பள கமிசன்நிராகரித்து,   அரசும் GDS  ஊழியர்களுக்கானஅதிகாரி கமிட்டி யை  நியமித்துள்ளபின்னணியில் , ஏழாவது  சம்பள கமிசனின்பரிசீலனைக்கு GDS  பிரச்னையை அனுப்பிடகோரி வேலை நிறுத்தம் செய்வதுபொருத்தமாகாது  என்று நமது சம்மேளனசெகட்ரியேட் கருதுகிறது . தற்பொழுது NDA அரசு GDS  ஊழியர்களை அரசு ஊழியராககருதி நிரந்தரமாக்கும் ஒரு கொள்கை முடிவை எடுத்தால்தான் GDS  ஊழியர்களுக்கு நீதிகிடைக்கும்.  அத்தகைய கொள்கை முடிவைஅரசு தானாக எடுத்திடாது .  அரசின்கொள்கையில் அத்தகைய மாற்றத்தினைஏற்படுத்திட மிகப்பெரிய அளவில் GDS உள்ளிட்ட தபால் ஊழியர்களை திரட்டி ,அனைத்து  மத்திய அரசு ஊழியர்களின்ஆதரவினை மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் மூலமும்  மற்றும் JCM  தேசியகுழுவில் உள்ள ஊழியர் அமைப்புகளின்ஆதரவோடு  வேலை நிறுத்தம் செய்வதுஅவசியம்எனவே , டிசம்பர் 1&2 தேதிகளில்நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை தள்ளிவைப்பது என சம்மேளன செகட்ரியேட் ஏகமனதாக முடிவு செய்துள்ளது .
அரசிற்கு நமது வன்மையானகண்டனத்தை தெரிவிப்பதற்கும் GDS ஊழியர்களை இலாகா  ஊழியர் ஆக்கிடவலியுறுத்தியும் NFPE சம்மேளனமாபொதுசெயலர் மற்றும் சம்மேளனத்தைச் சார்ந்த அனைத்து பொதுச்செயலர்கள்  டிசம்பர்1&2 தேதிகளில் டெல்லியில் அஞ்சல்இயக்குனரகம் முன்பு இரண்டு நாள்உண்ணாவிரதம் இருப்பதென  முடிவுசெய்யப்பட்டுள்ளது .கோட்ட , மண்டல  மற்றும்மாநில அளவில் 11.12.2015 அன்று நாடுதழுவிய உண்ணா விரதம்  இருந்திடஅறைகூவல் விடுத்துள்ளது .

No comments:

Post a Comment